மருந்துகளின் பயன்பாட்டின் பகுத்தறிவு
  
Translated

மருந்துகளின் பயன்பாட்டின் பகுத்தறிவு — மருந்துகளை நோயாளிகளின் நிலைமைக்கேற்பவும், அவர்களின் சிகிச்சை தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுகளிலும், தக்க காலத்திற்கும், நோயாளிக்கும் அவர்களின் குமுகாயத்திற்கும் மிகக் குறைந்த செலவில் பயன்படுத்துவதற்கான செயல்.

 

“மருந்துகளைப் பகுத்தறிவுடன் பயன்படுத்தினால், தனிநபர்கள் தங்கள் மருத்துவச் செலவுகளைக் குறைக்கவும், சரியான அளவு சிகிச்சையைப் பெறவும் உதவும். இந்த நடைமுறையால் கொல்லிகளின் செயல்திறனைப் பராமரிக்க முடியும்.”

Learning point

நாம் ஏன் மருந்துகளைப் பகுத்தறிவுடன் பயன்படுத்துகிறோம்?

 

அனைத்து மருந்துகளிலும் 50 சதவீதம் முறையற்ற முறையில் பரிந்துரைக்கப்படுகிறது, விநியோகிக்கப்படுகிறது, விற்கப்படுகிறது என்று உலக சுகாதார அமைப்பு மதிப்பிடுகிறது.[1] கொல்லிகளைத் தவறாக எடுத்துக் கொள்ளும் நோயாளிகளும் இதில் அடங்குவர். இது மட்டுமில்லாமல் மூன்றில் ஒரு பங்கு பொதுமக்களுக்கு அடிப்படை மருந்துகள் கிடைக்க வழியில்லை.

 

உலக சுகாதார அமைப்பு நெறிமுறைகளின்படி பகுத்தறிவற்ற முறைகளில் மருந்துகள் பயன்பாட்டின் வகைகள்:

 

- ஒரு நோயாளிக்கு அதிகமான மருந்துகளைப் பயன்படுத்துதல்

- நுண்ணுயிர்ப்பிணி அல்லாத நோய்களுக்கு தவறாக பயன்படுத்துதல்  

- போதிய அளவு எதிர்நுண்கிருமிகளைப் பயன்படுத்தாமல் விடுதல்

- மிகவும் பொருத்தமானதாக வாய்வழி உட்கொள்ளும் மருந்து இருக்கும்போது ஊசி மருந்துகளின் அதிகப்படியாக பயன்படுத்துதல்

- சான்றளிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் மருத்துவ வழிகாட்டுதல்களின்படி பரிந்துரைக்கத் தவறிவிடுதல்

 

பகுத்தறிவற்ற முறையில் மருந்துகள் பயன்பாடு மரணம் உள்ளிட்ட கடுமையானப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இந்தத் தவறான நடைமுறைகளால் பாதிக்கப்படக்கூடிய சில நீடித்த நோய்கள்: இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், வலிப்பு நோய் மற்றும் மன நோய்கள் ஆகும்.

 

பெரும்பாலும், நோயாளிகள் சொந்த பணத்தில் மருந்துகளை வாங்குகின்றனர். தவறான அளவுக்கு மீறி பயன்படுத்துதல் விலைமதிப்பற்ற கொல்லிகளை வீணாக்குவதாகும்.  இதைத்தவிர, மோசமான விளைவுகள் மற்றும் மருந்து எதிர்வினைகள் நோயாளிக்குக் குறிப்பிடத்தக்க தீங்கை விளைவிக்கும்.

 

எதிர்நுண்கிருமிகளின் பகுத்தறிவற்ற அல்லது அதிகப்படியான பயன்பாடு நுண்கிருமிகள் எதிர்ப்பை அதிகரிக்க வழிவகுக்கிறது. பகுத்தறிவற்ற கொல்லிகளின் பயன்பாடு பொருத்தமற்ற நோயாளியின் கோரிக்கைகளைத் தூண்டும். இதனால், ஒழுங்குபடுத்தப்பட்ட சுகாதார வசதிகளுக்கான அணுகுமுறை குறைவதற்கும் சுகாதார அமைப்பில் நோயாளிகளின் நம்பிக்கையை இழப்பதற்கும் வழிவகுக்கும். இதனால், வரும் விளைவுகள் பல. எதிர்நுண்கிருமிகளை வாங்குவதற்கான ஒரு தீய சுழற்சிக்கு வழிவகுக்கும். பொதுமக்கள் சீட்டு இல்லாமல் மருந்து வாங்குவது மட்டுமல்லாமல், மருந்துக் கடைகளிலிருந்தோ அல்லது சுகாதார அமைப்புகளிலிருந்தோ வலிமையான எதிர்நுண்கிருமிகளைக் கேட்கிறார்கள். இந்தத் தீய சுழற்சியை நிறுத்த, மருந்துகளின் பகுத்தறிவு பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான அனைத்து முக்கிய கொள்கைகளும் செயல்படுத்தப்பட வேண்டும்.  மருத்துவப் பயன்பாட்டுக் கொள்கைகள், மருத்துவ வழிகாட்டுதல்கள், சுயாதீன மருந்து தகவல்கள், மருந்துகள் பற்றிய பொதுக் கல்வி போன்ற மிக முக்கிய அங்கங்களை ஒருங்கிணைக்கும் ஒரு தேசிய அமைப்பு மிகவும் தேவை.

 

Related words.
Word of the month
New word